Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாதலியின் சடலத்தை பாழடைந்த தோட்டத்தில் விட்டுச் சென்ற இளைஞன்

காதலியின் சடலத்தை பாழடைந்த தோட்டத்தில் விட்டுச் சென்ற இளைஞன்

வேயங்கொட – தன்விலான பிரதேசத்தில் 21 வயதுடைய யுவதி ஒருவர் தனது காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தகராறில் தற்கொலை செய்து கொள்வதாக தனது காதலனுக்கு குறுஞ்செய்தி மூலம் அவர் அறிவித்துள்ளார்.

செய்தியை பார்த்து காதலன் குறித்த யுவதியை தேடி வந்த போது அவர் தூக்கிக் கொண்டிருப்பதை கண்டுள்ளார்.

இந்நிலையில் யுவதியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, ​​அவர் இறந்துவிட்டதை காதலன் அறிந்து கொண்டுள்ளார்.

அதற்கமைய, பெண்ணின் சடலம் வெறிச்சோடிய பகுதியில் விட்டுச் சென்றமை அருகில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

23 வயதான காதலன் பொலிஸில் சரணடைந்ததுடன் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles