Saturday, September 20, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் மீண்டும் சூறாவளி ஏற்படக்கூடும்

இலங்கையில் மீண்டும் சூறாவளி ஏற்படக்கூடும்

நாட்டின் காலநிலையில் தாக்கம் செலுத்திய மாண்டஸ் சூறாவளி பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூறாவளி தாக்கத்தால் சமீப நாட்களில் நாடு முழுவதும் ஒரு குளிர் காலநிலை ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்ககடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் வலுவடைந்தது.இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் உட்பட இலங்கையின் சில இடங்களில் கடும் மழை பெய்தது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் திடீரென சூறாவளியுடன் காற்றின் தோற்றம் ஏற்பட்டது.

இந்த சூறாவளி திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

இதன் காரணமாக நாடு முழுவதும் சீரற்ற காலநிலை நிலவியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாட்டில் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles