Wednesday, April 15, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனுஷ்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி

தனுஷ்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி

அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க நேற்று சிட்னி நீதிமன்றில் மீண்டும் முன்னிலையாகி இருந்தார்.

இதன்போது, தற்போது அவர் வசித்து வருகின்ற வீட்டிலிருந்து ஒரு படுக்கையறை கொண்ட மாடி குடியிருப்பு வீடொன்றுக்குச் செல்வதற்கு அனுமதி கோரினார்.

தற்போது அவர் இன்னுமொரு இலங்கையருடன் வசித்து வருகின்ற நிலையில், அது அவருக்கு அசௌகரியமாக இருப்பதால், தாம் தனித்து வசிக்கப் பிரியப்படுவதாக தமது சட்டத்தரணி ஊடாக அவர் நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தினார்.


அவரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் இல்லத்திலிருந்து தொலைவில் உள்ள வீடொன்றாக இருந்தால், அதில் வசிக்க அவருக்கு அனுமதி வழங்கப்படும் என்று சிட்னி – டவுனிங் சென்டர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், இந்த வழக்கை ஜனவரி மாதம் 12ம் திகதி மீள விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டது.

தனுஷ்க குணதிலக்கவின் கடவுச் சீட்டுப் பரிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரால் எந்தவொரு நாட்டுக்கும் பயணிக்க முடியாது என்பதோடு, நாளாந்தம் அவர் பொலிஸ் நிலையத்தில் கைச்சாத்திட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles