Monday, June 1, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரபல வர்த்தகர் கடத்தி கொலை

பிரபல வர்த்தகர் கடத்தி கொலை

பிரபல வர்த்தகரான தினேஷ் சாப்டர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் நேற்று(15) பகல் காணாமல் போய் இருந்த நிலையில், மாலையில் கார் ஒன்றிலிருந்து காயங்களுடனும் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் மீட்கப்பட்டிருந்தார்.

பின்பு அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் சாப்டர், தமிழ் முற்போக்கு கூட்டணியினுடைய முன்னாள் பொதுச் செயலாளர் சந்திரா சாப்டரின் மகன் என்பதும் அவர் ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles