விச போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் திருத்தத்தின் மூலம் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருக்கும் நபருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
இன்று (16)கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கல்வித்துறை அதிகாரிகளுக்கான நிகழ்வில் கலந்துக்கொண்டப்போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
விச போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் 4 வகையான மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும்இ தற்போது 178 வகையான மருந்துகள் அதன் கீழ் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும்இ பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு விசேட பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.