Wednesday, May 21, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டு180 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

180 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இன்றைய தினம் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட படகொன்றினை கடற்படையினர் வழிமறித்து சோதனையிட்ட போது, அதிலிருந்து குறித்த கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து படகில் இருந்த நபரை கடற்படையினர் கைது செய்ததுடன், படகினையும் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles