Monday, November 18, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹியங்கனை - பண்டாரவளை வைத்தியசாலைகளை தரமுயர்த்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை

மஹியங்கனை – பண்டாரவளை வைத்தியசாலைகளை தரமுயர்த்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை

மஹியங்கனை பிராந்திய வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து தரமுயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மஹியங்கனை பிராந்திய வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாகவும் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாகவும் தரமுயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இன்று பதுளையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் உள்ள கிரந்துருகோட்டை வைத்தியசாலை மற்றும் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையை பிரதேசவாசிகளின் தேவையை கருத்திற்க் கொண்டு அபிவிருத்தி செய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles