Friday, April 10, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்து வாங்க கொடுக்கப்பட்ட நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லையாம்

மருந்து வாங்க கொடுக்கப்பட்ட நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லையாம்

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டு நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழு தெரிவித்துள்ளது.

அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளிடம் தனது அதிருப்தியையும் அது வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய அரசாங்கம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கி என்பன சுகாதார அமைச்சுக்கு பணம் வழங்கிய போதிலும் அரச திணைக்களங்கள் அதனை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என உபகுழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க MP தெரிவித்துள்ளார்.

அதற்காக தாம் வேதனை அடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles