Friday, September 19, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து லொறியுடன் மோதி விபத்து - ஐவர் காயம்

பேருந்து லொறியுடன் மோதி விபத்து – ஐவர் காயம்

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று (14) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 5 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலி-கொழும்பு பிரதான வீதியில் வடக்கு பயாகல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காலி வீதியில் விளக்குகள் எரியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது, ​​லொரியின் பின்புறம் அடுக்கப்பட்டிருந்த கூரைத் தகடுகள் பேருந்துக்குள் உட்சென்றுள்ளது.

இதனால் ஆடைத் தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதுடன், லொறியின் சாரதியை பயாகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தற்போது களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles