தற்போதுள்ள விலையில் மாற்றம் செய்து புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் சுற்றிவளைப்பு நடத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களில் பதிவு செய்யப்பட்ட விலைகள் தீவின் பல்வேறு பகுதிகளில் மாற்றப்பட்டு அவை தற்போதைய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை தற்போதுள்ள விலைகளை மாற்றி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பயிற்சி புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.