தான் மத்திய வங்கி ஆளுநராக இருந்த போது டொலரின் பெறுமதியை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தியதையே தற்போதைய மத்திய வங்கி ஆளுநரும், நாணயச் சபையும் செய்து வருவதாக அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி டொலரின் பெறுமதியை அதிகரிக்காமல் பெறுமதியைக் கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும், தற்போதைய மத்திய வங்கி ஆளுநரும் அதனையே செய்கின்றார் எனவும், ஆனால் தமக்கு தவறேதும் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது பொருளாதார நிலை கட்டுப்படுத்தப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் ஆனால் இன்று என்ன நடக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சியாளர்கள் நாட்டு மக்களுக்கு பாரத்தை சுமத்தாமல் மாற்று வழிகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் மாற்று வழிகளைத் தேட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தை மட்டும் நம்பியிருப்பது தீர்வாகாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
திப்போடுவாவே ஸ்ரீ சுமங்கல மல்வத்து மகா நஹிமியை தரிசித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.