Monday, December 22, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஜப்பான் ஆதரவு

கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஜப்பான் ஆதரவு

கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பது தொடர்பில் ஜப்பானிய பிரதிநிதிகள் உறுதியளித்ததாக நிதி, பொருளாதார மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள், நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று(13) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜப்பானிய பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்ததாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஸ்திரப்படுத்தல், தேசிய கொள்கைகள் அமைச்சில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஜப்பானிய தூதரக பிரதிநிதிகள் குழு, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles