Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2400 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது!

2400 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதுமலை பகுதியில் வைத்து 2400 கிலோ எடையுடைய மஞ்சள் பொதிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர்கள் கைதாகினர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் பட்டா ரக வாகனத்தில் மஞ்சளை கடத்திச் சென்றவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறியமுடிகிறது.

மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களுடன் சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles