Saturday, September 20, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணத்தை செலுத்தாத எம்.பிகளுக்கு கால அவகாசம்

மின் கட்டணத்தை செலுத்தாத எம்.பிகளுக்கு கால அவகாசம்

தற்போதைய அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பல அமைச்சர்களினால் அதிகளவான மின்சாரக் கட்டணங்கள் தீர்க்கப்படாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு புதிய செயல்முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களை காலி செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் இடைக்காலத்தின் போது அத்தகைய வீடுகளுக்கான கட்டணங்களை செலுத்துவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முரண்பாடு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், செலுத்தப்படாத பட்டியல்களின் தொகை இலட்சக்கணக்கான ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ இல்லங்களின் செலுத்தப்படாத பில்கள் மீதும் வட்டி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மின்சார கட்டணத்தை செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு நோட்டீஸ் வழங்குவதற்கு கூட உயிருடன் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே புதிய பொறிமுறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கை மின்சார சபை சாத்தியமான இடங்களில் நிலுவைகளை வசூலிக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles