Thursday, May 22, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுறைமுகத்தில் சிக்கிய 4 இலட்சம் கிலோ பால்மா விடுவிப்பு

துறைமுகத்தில் சிக்கிய 4 இலட்சம் கிலோ பால்மா விடுவிப்பு

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் அனுமதி பெறாத காரணத்தினால் 118 மில்லியன் ரூபா வங்கி உத்தரவாதத்தின் பேரில் துறைமுகத்தில் சிக்கியிருந்த 4 இலட்சம் கிலோ கிராம் பால் மாவை சம்பந்தப்பட்ட நிறுவனம் விடுவித்துள்ளது.

37 நாட்களாக துறைமுகத்தில் பால் மா கையிருப்பு வைக்கப்பட்டிருந்ததால் கப்பல் நிறுவனமும் துறைமுகமும் 96 இலட்சம் ரூபாய் தாமதக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருந்தது.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதம் நடைபெற்றது.

இதேவேளை, கடந்த 9ஆம் திகதி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை 1240 ரூபாவாக அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles