பண்டிகை காலத்தில் தட்டுப்பாடின்றி எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு தயாராக உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்காக 34,000 மெட்ரிக் டன் எரிவாயு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மற்றுமொரு எரிவாயு கப்பலொன்று இன்று (13) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.