சுகாதார அமைப்பிற்கு தேவையான 81 மில்லியன் ரூபா பெறுமதியான ரெபிஸ் தடுப்பூசிகளின் கையிருப்பு ஜேர்மன் அரசாங்கத்தினால் சுகாதார அமைச்சுக்கு நேற்று நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் அரசாங்கத்தின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் கீழ் GIZ Sri Lanka திட்டத்தின் பணிப்பாளர் நிக்கோலஸ் லாமேட், சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இத்தடுப்பூசிகளை கையளித்தார்.
விசர் நாய் கடிக்கான தடுப்பு மருந்தாக குறித்த ரேபிஸ் தடுப்பூசி பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.