கொள்ளுப்பிட்டி பகுதியில் வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு டுபாய்க்கு தப்பிச் சென்ற சந்தேகநபர் இன்று (13) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து நாடு திரும்பிய பின்னரே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி காலை 06.30 மணியளவில் முச்சக்கரவண்டியுடன் சந்தேக நபரின் கார் மோதுண்டதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்தார்.
காரின் சாரதியான வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மொஹமட் ரசூல் மொஹமட் ரிஷாக் என்பவர் விபத்து இடம்பெற்ற பின்னர, அன்றைய தினம் காலை 09:55 மணியளவில் நாட்டை விட்டு டுபாய்க்கு சென்றுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.