2023/24 மகாபருவ உர விநியோகத்தில் இருந்து விலகுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பல விடயங்களில் கவனம் செலுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நெல் மற்றும் சோளம் பயிர்ச்செய்கைக்கு தேவையான யூரியா மற்றும் ஏனைய உரங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் மானியமாக விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி மகா பருவத்துக்கு தேவையான யூரியா உரம் உள்ளிட்ட அனைத்து உரங்களும் தனியாரால் வழங்கப்படுவதுடன், உரங்களை வாங்க தேவையான பணம் விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 50,000 ரூபாவுக்கு மேல் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.