Friday, March 14, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉபவேந்தர் மீது தாக்குதல்: 6 பல்கலை மாணவர்கள் கைது

உபவேந்தர் மீது தாக்குதல்: 6 பல்கலை மாணவர்கள் கைது

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் உள்ளிட்டோரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் 23 மற்றும் 25 வயதுடைய நிட்டம்புவ, கிரிதலை, மாத்தளை மற்றும் ஹேன்கமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் மேலும் 6 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles