Tuesday, March 18, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅம்பாறை - மன்னார் நகர சபைகளை தரமுயர்த்த அனுமதி

அம்பாறை – மன்னார் நகர சபைகளை தரமுயர்த்த அனுமதி

அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக வசதிகள் மற்றும் மனித வளங்களைப் பயன்படுத்தி, மேலதிக நிதியைச் செலவிடாமல் ஒருசில மாவட்டங்களில் காணப்படும் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அங்கீகாரத்தை கருத்தில் கொண்டு அம்பாறை மற்றும் மன்னார் ஆகிய இரண்டு நகரங்களிலும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திப் பணிகளை இலகுபடுத்துவதற்காக, குறித்த நகர சபைகள், மாநகர சபைகளாக தரமுயர்த்துவதப்படவுள்ளன.

இது தொடர்பில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles