Saturday, July 5, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉள்ளூராட்சி தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா செலவாகுமாம்

உள்ளூராட்சி தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா செலவாகுமாம்

உள்ளூராட்சி தேர்தலை நடத்த சுமார் 10 பில்லியன் ரூபா செலவாகும் என தேசிய தேர்தல் ஆணையம் மதிப்பீட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்த செலவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையத்தின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் இறுதி வாரத்தில் கோரப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் (திருத்தம்) சட்டத்தின் விதிகளின்படி வேட்புமனுக்கள் கோரப்படும் என்று தேசிய தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மட்டத்தில் 2022 வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அதன்படி 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles