யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்நாட்களில் வளிமண்டலம் கடுமையாக மாசடைந்துள்ளது.
தற்போது பல இடங்களில் புகைமண்டலமாக காணப்படுவது பனி முகில் இல்லை என்றும், அது இந்தியாவில் இருந்து வீசும் காற்றினால் ஏற்பட்டுள்ள மாசு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் சுவாச, இருதய பிரச்சினையுள்ளவர்கள் முகக்கவசம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலைமை இன்று முதல் தணிவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபைத் தெரிவித்துள்ளது.
இன்று முதல் படிப்படியாக இலங்கையின் வளிமண்டல மாசு நிலைமை குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.