மஸ்கெலியா – சாமிமலை கவரவில தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியான நல்லையா சிவக்குமாரின் குடும்பத்திற்கு, 50 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்க ஹொரண பெருந்தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தினால், இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கு, நேற்றைய தினம் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த தொழிலாளியின் மனைவிக்கு குறித்த தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணிபுரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, குறித்த குடும்பத்தினருக்கு 20 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படவுள்ளது.