Thursday, May 22, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமழைக் குளிரால் உயிருக்கு போராடும் கால்நடைகள்

மழைக் குளிரால் உயிருக்கு போராடும் கால்நடைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பிலான புள்ளி விபரங்கள் அவ்வந்த நிணைக்களங்கள் ஊடாக திரட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சீரற்ற வானிலையால் உயிருக்கு போராடும் கால்நடைகளிற்கு கால்நடை வைத்தியர்களால் சிகிச்சையளிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த பாதிப்புக்கள் தொடர்பில், கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ். கெளரிதிலகன், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் என பலரும் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்போது, கருத்து தெரிவித்த கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ். கெளரிதிலகன் குறிப்பிடுகையில், குறித்த பாதிப்பு தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்ட்டு உரிய முறையில் சமர்ப்பிக்கப்படும் எனவும், இவ்வாறான காலநிலையின்போது, கால்நடைகளை அவதானமாக வைத்திருக்குமாறும் தெரிவித்தார்.

முதல் கட்டமாக, கால்நடைகளிற்கு அண்மித்து தீமூட்டி சூட்டினை வழங்குமாறும், பாதிப்புக்கள் ஏற்படின் கால்நடை வைத்தியர்களை அணுகுமாறும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles