நாவலப்பிட்டி நகரில் உள்ள அரிசிக் களஞ்சியசாலை ஒன்றில் மனித பாவனைக்குத் உதவாத சுமார் 1,500 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அரிசி மூடைகள் அனைத்தும் எலிகளால் உண்ணப்பட்டு, மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியற்றவை ஆகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைதான நபரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.