இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக எஸ்.எம்.டி.எல்.கே.டி. அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான நியமனக் கடிதம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வழங்கப்பட்டுள்ளது.
அல்விஸ் இலங்கை நிர்வாக சேவையில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.