இரவு நேரத்தில் மின்வெட்டினை அமுலாக்காமல் இருப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பரீட்சைக் காலங்களில் இரவு நேரத்தில் மின்வெட்டினை அமுலாக்காதிருக்க முடியுமா? என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நாடாளுமன்றில் வைத்து கோரினார்.
இதற்கு பதில் வழங்கிய அவர், மின்வெட்டினைத் தவிர்த்துக்கொள்ளவே தாங்கள் முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.தொடர்ந்து மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமாக இருந்தால், களனி திஸ்ஸ போன்ற எரிபொருளை கொண்டு மின்னுற்பத்தி செய்யும் நிலையங்களை இயக்க வேண்டும்.
இதற்காக பணம் செலுத்தி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபனத்திடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய மின்சார சபையை பணித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.