Sunday, July 13, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிசி இறக்குமதி இடைநிறுத்தம்?

அரிசி இறக்குமதி இடைநிறுத்தம்?

அரிசி இறக்குமதியை உடனடியாக இடைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ரணில் விக்ரமசிங்க பணிபுரை விடுத்துள்ளார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி விக்ரமசிங்க தனது சிரேஷ்ட ஆலோசகர் ஆர்எச்எஸ் சமரதுங்க விடம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

8 லட்சம் ஹெக்டேர் நெல் வயல்களில் 6 லட்சத்து 75 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயிகள் ஏற்கனவே பயிற்செய்கையை ஆரம்பித்துள்ளதாகவும்.

2023 ஆம் ஆண்டு அரிசி தட்டுப்பாடு ஏற்படும் கவலை இல்லை என அமைச்சர் அமரவீர ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது சில விவசாயிகள் 3 பருவ கால அறுவடைகளை கையிருப்பில் வைத்திருப்பதாகவும் எனவே இறக்குமதியை நிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் அமரவீர ஜனாதிபதிக்கு இவ்வாறு அறிவித்துள்ளார்.

அதன்படி வர்த்தமானியை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2021 மகா பருவம் தோல்வி அடைந்ததால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles