Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் முக்கியமான நகரங்களின் வளி கடுமையாக மாசடைந்துள்ளது.

இந்தியாவில் இருந்து வருகின்ற மாசு காற்றின் காரணமாக, இலங்கையின் வளிமண்டலத்தில் மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வளி தர சுட்டெண் 200க்கும் அதிகமாக இலங்கையில் பதிவாகியுள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் வளி தர சுட்டெண் 212 ஆகவும், கம்பஹாவில் 189ஆகவும், தம்புள்ளையில் 179 ஆகவும், கொழும்பில் 169 ஆகவும், கண்டியில் 161 ஆகவும், நீர்கொழும்பில் 170 ஆகவும், அம்பலாந்தொட்டையில் 157 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதன்காரணமாக மக்கள் முகக்கவசத்தை அணிந்துக் கொள்வது பாதுகாப்பானது என்று, வளி தரம் குறித்து கண்காணிக்கு இலங்கையின் கட்டிட ஆய்வு பணிமனை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles