Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுநீரக கடத்தல் விவகாரம்: கொழும்பு தனியார் வைத்தியசாலை விளக்கம்

சிறுநீரக கடத்தல் விவகாரம்: கொழும்பு தனியார் வைத்தியசாலை விளக்கம்

சிறுநீரக மோசடி தொடர்பில் தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்ட நிலையில், உடல் உறுப்புக் கடத்தலுடன் எவ்வித தொடர்பும் இல்லை என கொழும்பு – பொரளை தனியார் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

எந்தச் சூழ்நிலையிலும் இந்தக்கடத்தலில் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்ட தனியார் வைத்தியசாலை கூறியுள்ளது.

எனவே ஊடகங்கள் தெரிவித்த கூற்றுகளில் உள்ள உண்மைகளை விசாரணைகள் விரைவில் வெளிப்படுத்தும் என்று நாங்கள் நம்புவதாக குறித்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களாக உலகத்தரம் வாய்ந்த செயல்முறைகள், நடைமுறைகள், பணியாளர்கள் மற்றும் வசதிகளுடன் நோயாளிகளுக்கு சில சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதன் காரணமாக, இவ் தனியார் வைத்தியசாலை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நற்பெயரைப் பெற்றுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக தமது மருத்துவமனை, 1200 க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை நடத்தியுள்ளது. அத்துடன்; 10,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இவ்வாறான சேவைகளுக்காக, தமது மருத்துவமனை பல பாராட்டுகளைப் பெற்றுள்ளமையானது, பலரிடையே பொறாமைக்கு வழிவகுத்தது என்றும் மருத்துவமனை கூறியுள்ளது.

உதாரணமாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், ஒரு முக்கிய அரசியல்வாதி, சஹாரானின் சகோதரர் ரில்வான் என்ற பயங்கரவாதிக்கு மருத்துவமனை சிகிச்சை அளித்ததாக பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

எனினும் இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் பரவி மருத்துவமனையின் நற்பெயரையும் நன்மதிப்பையும் பெருமளவில் கெடுத்தது. இந்த அறிக்கை அப்பட்டமாக தவறானது என்று நிரூபிக்கப்பட்டது.

இதனையடுத்து 2022 நவம்பர் 18அன்று, ஒரு குழுவினர் மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டனர், அவர்கள் சிறுநீரக தானத்திற்குப் பதிலாக தங்களுக்குச் செலுத்த வேண்டிய அதிகப்படியான பணத்தைக் கோரினர்.

அதில் ஒரு பகுதி மட்டுமே தங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். உண்மையில், எந்தவொரு நன்கொடையாளரிடமிருந்தும் ஒப்புதல் பெறப்படும் ஒரு கடுமையான நடைமுறை உள்ளது, அவருடைய விருப்பத்திற்கு எதிராக எந்த நன்கொடையாளர் உறுப்புகளும் எடுக்கப்படுவதில்லை.

பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ தலைமையில் கலாநிதி அரியாராணி ஞானதாசன், சம்பிகா மொனரவில சட்டத்தரணி மற்றும் திரு.கே.ஏ.எஸ்.தர்மசிறி ஆகியோர் அடங்கிய சுயாதீன குழுவுடனான விரிவான நேர்காணலும் இதில் அடங்கும்.

அதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சகம் ஒப்புதல் வழங்கும் மூன்று அடுக்கு செயல்முறை உள்ளது. எந்தவொரு நன்கொடையாளரும் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன் எப்போது வேண்டுமானாலும் அறுவை சிகிச்சைக்கு செல்லும் வழியில் தங்கள் ஒப்புதலை திரும்பப் பெறலாம். நன்கொடையாளர்கள் தங்கள் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொள்வதற்கு முன் கடுமையான சட்டத் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் மருத்துவமனை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் வழமையான போக்கில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முறையான விசாரணைக்கும் தமது முழுமையான உதவியை மீண்டும் வலியுறுத்துவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles