அடுத்த ஆண்டு இலங்கைக்கு 19 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருமானமாக கிடைக்கும் என்று வர்த்தக அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இதற்காக பல்வேறு மூலோபாய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தக ஏற்றுமதிகள் ஊடாக 14.8 பில்லியன் டொலர்களும், எஞ்சிய 4.2 பில்லியன் டொலர்கள் சேவைகள் ஏற்றுமதி ஊடாகவும் வருமானம் ஈட்ட எதிர்பார்க்கப்படுகிறது.