Thursday, January 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுPUCSL தலைவர் ஹோட்டல்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குகிறார் – கஞ்சன விஜேசேகர

PUCSL தலைவர் ஹோட்டல்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குகிறார் – கஞ்சன விஜேசேகர

ஹோட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கியதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக்க ரத்நாயக்க மீது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

அது தொடர்பான விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என அமைச்சர் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தனது தவறான செயல்கள் அம்பலப்படுத்தப்பட்டதால் பிரச்சினைகளை உருவாக்குகிறார் என அமைச்சர் குறிப்பிட்டார்.

மின்கட்டண உயர்வை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் நிராகரித்துள்ள நிலையில், மின் கட்டண உயர்வை அமைச்சர் ஏன் கூறுகின்றார் என லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles