Saturday, September 20, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை

மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை

பாடசாலைகளில் மாணவர்களிடையே போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்து அவர், எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி பாடசாலை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

காவல்துறையினர் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இதற்காக பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

நாடு முழுவதும் உள்ள 100 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 10,155 பாடசாலைகளிலும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இந்த விடயம் தொடர்பான ஆலோசனைகள் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles