கொழும்பில் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பெண்களைக் கொண்ட ஆறு பேர் கொண்ட கும்பலை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் பல்வேறு பகுதிகளில் கும்பலாக கொள்ளையில் ஈடுபட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்களில் பல்வேறு வழிமுறைகள் மூலம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆடைத் தொழிற்சாலை ஒன்றியில் பணியாற்றிய நிலையில், இவர்கள் கும்பலாக ஒன்றிணைந்துள்ளனர்
இந்த கொள்ளை கும்பலுடன் மேலும் சிலர் தொடர்புப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.