வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட்-19 விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டார்.
இன்று முதல் இந்த தளர்வு அமுலுக்கு வருகிறது.
இதன்படி, இன்று முதல் இலங்கை வருபவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை.
நாட்டுக்கு வருவதற்கு முன்னர் பெறப்பட்ட பி.சி.ஆர் அறிக்கையும் அவசியமில்லை.