உலக உணவுப் பாதுகாப்பில் 65 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 75 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து 7 இலட்சம் மெற்றிக் டன் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இன்று விவசாயிகள் அரிசியை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் அதிகம் உள்ள பொலன்னறுவை இன்று போசாக்கு குறைபாடுள்ள மாவட்டமாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்வதற்கு நூறு ரூபாவுக்கு மேல் செலவாகும் நிலையில் ஒரு கிலோ நெல் 90 ரூபாவிற்கும் குறைவாகவே விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினார்.