கல்விச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, க.பொ.த சாதாரண தரப் பாடத்திட்டத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை (ICT) ஒரு முக்கிய பாடமாக உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.
கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், உலகளாவிய தொழில் சந்தையை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை மாணவர்களை ஆயத்தப்படுத்துவதற்கும் அவர்களை வலுப்படுத்துவதற்கும் ஆர்வமாக உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இச்செயற்பாட்டின் ஒரு பகுதியாக க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான ஒரு முக்கிய தொகுதியாக ஐஊவு அமைவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.