Wednesday, May 21, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 20 பேர் சிக்கினர்

சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 20 பேர் சிக்கினர்

திருகோணமலை கடற்பரப்பில் உள்ளுர் மீன்பிடி இழுவை படகில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற 20 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடற்பரப்பில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 16 ஆண்களும், 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண் மற்றும் மூன்று சிறுவர்களும் 6 பேர் மோசடியில் ஈடுபட்டவர்களும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு, மூதூர், யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத குடியேற்ற முயற்சிகளைத் தடுப்பதற்காக, கரையோரப் பகுதிகளில் ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles