அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடவுச்சீட்டு வழங்கும் நடைமுறையில் பாரிய மாற்றம் அமுலாக்கப்படவுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் சம்பிக்க ராமவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய நடைமுறையின் கீழ் கடவுச் சீட்டுக்கான விண்ணப்பங்களை முழுமையாக இணைத்தளம் மூலமாகவே அனுப்ப முடியும்.
அவர்கள் தங்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வது போன்ற சில நடைமுறைக்காக மாத்திரமே குடிவரவு திணைக்கள அலுவலகத்துக்கு வர நேரும்.
அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகங்களின் கீழ் 50 கிளை அலுவலகங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.