மொனராகலை, கொட்டியாகலை மற்றும் கபிலித்த பிரதேசங்களில் உள்ள 5,000 ஹெக்டேயர் காணியை தற்காலிக பயிர்ச்செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் .உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்காக மொனராகலை, கொட்டியாகலை மற்றும் கபிலித்த பிரதேசங்களில் உள்ள காணிகளை விவசாயத்திற்காக பயன்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலங்கள் முன்னர் காடுகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டவையாகும்.
வனத் திணைக்களத்திற்குச் சொந்தமான மொனராகலை, கொட்டியாகலை மற்றும் கபிலித்த பிரதேசங்களில் தற்போது 8,000 ஹெக்டேயர் காணி மீள் காடுகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


