பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதற்கு செயலணியை நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை செங்குத்தாக அதிகரித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் போதைப்பொருளை ஒடுக்குவதற்கான வேலைத்திட்டங்களில் விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்துவதற்கு தீர்மானம் எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.