லங்கா சதொசவின் வருமானம் 2022 மே முதல் ஜூலை வரை 400 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அதன் வருமானம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் லங்கா சதொச வருமானம் 5,389 மில்லியன் ரூபாவாகும் என அமைச்சர் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
பொருளாதார நெருக்கடியின் போது மக்களின் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.