இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் பொதி விநியோக சேவையினை அரச அணுசரனையுடனான தனியார் நிறுவனத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகலில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆராச்சிகே இதனை தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு முதல் இந்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சேவையை மிகவும் வினைத்திறனுடன் செயற்படுத்த முடியும்.
அஞ்சல் சேவையின் ஊடாக பொதி விநியோக சேவை முன்னெடுக்கப்படுகிறது.
பல வருடங்களாக பொதியிடல் மற்றும் பல இடங்களுக்கான விநியோகத்தில் தாமதம் ஏற்படுகின்றது.
இதற்காக பாரிய நிதி செலவிடப்படுகின்றது.இந்த துறையினை இலாபம் ஈட்டும் மற்றும் வினைத்திறனுடன் முன்னெடுக்க அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் நிறுவனத்தின் ஊடாக பொதி விநியோக சேவையினை செயற்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்