Thursday, December 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமண்டேலாவுக்கு கிடைத்த மரியாதை மஹிந்தவுக்கு கிடைக்க வேண்டுமாம்

மண்டேலாவுக்கு கிடைத்த மரியாதை மஹிந்தவுக்கு கிடைக்க வேண்டுமாம்

மஹிந்த ராஜபக்ஷ இனி அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துக் கூறுகையில்,

மஹிந்த இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய சேவை அனைத்தையும் செய்துவிட்டார். மஹிந்தவின் தலைமைத்துவம் இல்லை என்றால் இப்போதும் யுத்தம் நடந்துகொண்டிருக்கும்.

அவர் 80 வயதை நெருங்குகின்றார். அவர் ஓய்வெடுப்பது நல்லது. யாரும் அவரை அவர்களின் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தினால் அதற்கு நான் இணங்கமாட்டேன்.

நெல்சன் மண்டேலாவின் மரணத்தின்போது உலகத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்படியொரு கௌரவம் மஹிந்தவுக்குக் கிடைக்க வேண்டும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles