இலங்கையில் வாழும் 56.8 வீதமானவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் வசிக்க விருப்பத்துடன் இருப்பதாக கருத்து கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மாற்று கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் நடத்திய புதிய கருத்து கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இலங்கை மக்களில் 41.5 வீதமானவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் 77.2 வீதமானவர்கள் இலங்கைக்கு வெளியில் வேறு நாட்டில் வசிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
22 வீதமானவர்களே நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் வசிப்பதை விரும்பவில்லை.
30 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 45 வீதமானவர்கள் மாத்திரம் நாட்டில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
52.5 வீதமானவர்கள் நாட்டில் இருந்து வெளியேற விரும்பவில்லை என கூறியுள்ளனர்.