Thursday, December 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மீள ஆரம்பிக்க இணக்கம்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மீள ஆரம்பிக்க இணக்கம்

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பது தொடர்பில் இன்று நாடாளுமன்றில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டது.

இதன்படி சைட்டம் (SAITM) என்ற தனியார் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க முடியும் என்று இரண்டு தரப்பினரும் உடன்பட்டனர்.

கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்து, அங்குப் பயிலும் வறுமையான மாணவர்களுக்கு அரசாங்கம் நிதியுதவிகளை மேற்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த கல்லூரியை மீள ஆரம்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லையென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எனவே அனைத்து தரப்பினரும் இணைந்து இது தொடர்பில் கலந்துரையாட முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles