கடந்த 8 மாதங்களில் சுமார் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அனுப்பிய கேள்விக்கு நேற்று (29) பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
வைத்தியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும், இந்த நிலை உருவாகினால், சுகாதார அமைப்பு முற்றாக வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வெளிநாடு செல்லும் வைத்தியர்களும் இருப்பதாகவும், உரிய அனுமதியின்றி வெளிநாடு செல்லும் வைத்தியர்களுக்கு ராஜினாமா நோட்டீஸ் வழங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.