நாடளாவிய ரீதியாக எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறுகின்ற மோசடிகள் தொடர்பான விசாரணைகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாக, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிராந்திய பிரதி பணிப்பாளர் தனுஜ் விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
95 ஒக்டேன் பெற்றொல் என கூறி, 92 ஒக்டேன் விற்பனை செய்யப்பட்டமை, ஒரு லீற்றர் எரிபொருளில் இருக்க வேண்டிய அளவை விட குறைவாக விநியோகிக்கப்பட்டமை போன்ற பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான சுற்றிவளைப்புகளின் பின்னர் முறைப்பாடுகள் குறைவடைந்துள்ளன.
இதுகுறித்து திரட்டப்பட்ட 13 மாதிரிகளின் அறிக்கைகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், ஜனவரி மாத நடுப்பகுதியில் சக்திவலு அமைச்சிடம் தமது அறிக்கை கையளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.