Saturday, July 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு40,000 ஏழைக் குழந்தைகளுக்கு வளர்ப்பு பெற்றோரைத் தேடும் திட்டம்?

40,000 ஏழைக் குழந்தைகளுக்கு வளர்ப்பு பெற்றோரைத் தேடும் திட்டம்?

போசாக்கு குறைபாடுள்ள சுமார் 40,000 குழந்தைகளின் போசாக்கு தேவையை பெற்றோர்களால் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், அந்த குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதுவரை 21,000 போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஊட்டச்சத்து குறைபாடுள்ள 40,000 குழந்தைகளை இலக்காகக் கொண்டு இந்த வளர்ப்பு பெற்றோர் தேடல் திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் இது தொடர்பான திட்டத்திற்காக அரசாங்கம் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும், இந்திய நிறுவனம் ஒன்றும் இலங்கையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றும் இதற்காக ஒரு பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Mawrata

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles